தினமலர் 15.02.2010
வரி கட்ட தவறினால் குடிநீர் ‘கட்‘
திருத்தணி :”நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங் களை கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக் கப்படும்‘ என நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடு மற்றும் கடைகளுக்கு வரி பாக்கி அதிகளவில் நிலுவையில் உள்ளன. வரி பாக்கியை உடனடியாக வசூலிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப் பித்தது.இதையடுத்து, திருத்தணி நகராட்சியில் செலுத்த வேண்டிய வீட்டுவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை இனங்கள், உரிமக் கட்டணம் மற் றும் இதர வகை வரி பாக்கியை வரும் 28ம் தேதிக் குள் செலுத்த வேண்டும்.
கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.மேலும், ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் ஆட்டோவின் மூலம் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய் வதுடன் துண்டு பிரசுரமும் கொடுத்து வருகிறது. வரி செலுத்தும்பொதுமக்களின் வசதிக்காக திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப் பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு ஒத்துழைத்து வரி செலுத்த வேண் டும்.இவ்வாறு நகராட்சி ஆணையர் செண்பகராஜன் தெரிவித்தார். அப்போது திருத்தணி நகரமன்ற தலைவர் பாமாசந்திரன் உடனிருந்தார்.