தினமணி 18.02.2010
நகராட்சி பள்ளி ஆண்டு விழா
ராசிபுரம், பிப்.17: ராசிபுரம், பாச்சித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. ÷நகரமன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். உதவி ஆசிரியை என்.எஸ்.கஸ்தூரி வரவேற்றார். தலைமை ஆசிரியை ஜி.கலாவதி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக வட்டார வள மைய மேற்பார்வையாளர் வி.ரவி கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி குறித்து பேசினார்.
÷நகரமன்ற உறுப்பினர் மு.கருணாநிதி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் வட்டார வளமைய பயிற்றுனர் கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை மு.செல்வகுமாரி நன்றி கூறினார்.