தினமலர் 24.02.2010
லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்து அலுவலகம் மார்ச்சில் திறப்பு
கோபிசெட்டிபாளையம்: கோபி லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தின் புதிய அலுவலகம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. கோபியை அடுத்த லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளது. தற்போது பஞ்சாயத்து அலுவலகம் கோபி சட்டசபை தொகுதி அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அதே பகுதியில் “உள்கட்டமைப்பு அடிப்படை‘ வசதிகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 20 லட்ச ரூபாய் செலவில் லக்கம்பட்டி பஞ்சாயத்து யூனியனுக்கு புதிய அலுவலகம் கட்டும் பணி ஆறு மாதத்துக்கு முன் தொடங்கப்பட்டது. புதிய கட்டிடத்தில் தலைவர் அறை, செயல் அலுவலர் அறை, கூட்ட அறை, பொறியாளர் அறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தின் புதிய அலுவலகம் அடுத்த மாதம் முதல் செயல்பட தொடங்கும் என பஞ்சாயத்து தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.