தினமணி 01.03.2010
தொண்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு ஆட்சியர் பாராட்டு
திருவாடானை, பிப். 28: திருவாடானை தாலுகா தொண்டி பேருராட்சி செயல் அலுவலர், கொடி நாள் ரசீது வசூலை முழுமையாக செய்ததைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
திருவாடானை தாலுகா தொண்டி பேருராட்சியில் 2008-ம் ஆண்டுக்குரிய கொடி நாள் ரசீது வசூலினை முழுமையாக செய்த, தொண்டி பேருராட்சி செயல் அலுவலர் செ. மார்க்கண்டன் என்பவரை, மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பாராட்டி சானிறிதழ் வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.