தினமலர் 03.03.2010
வைகையில் கழிவுகளை கொட்டினால் அபராதம் கமிஷனர் எச்சரிக்கை
மதுரை:””வைகையாற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்,” என, மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின் எச்சரித்து உள்ளார்.வடக்குமண்டலத்தில் ஒன்று முதல் 21 வது வார்டு பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது :
வைகை ஆறு தற்போது சுத்தம் செய்யப்படுகிறது. ஆற்றின் கரையோரங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீரை கொட்டி, மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் மாடுகளைத் திரிய விடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் பழுடைந்துள்ள லாரிகள் விரைவில் சரிசெய்யப்பட்டு, அவற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றார். மேயர் தேன்மொழி, மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, தலைமை பொறியாளர் சக்திவேல், முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன், உதவி கமிஷனர்கள் (வருவாய்) பாஸ்கரன், ராஜகாந்தி, நிர்வாகப் பொறியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதாள சாக்கடை இணைப்பு வழங்குதல், குடிநீர், அடிப்படை வசதிகளை கோரிய பொதுமக்களின் மனுக்கள் பெறப்பட்டது