தினமலர் 11.03.2010
நல்லூர் நகராட்சி ஆவணங்கள் ஆய்வு
திருப்பூர் : நல்லூர் நகராட்சியில் கையாளப் படும் ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் பெயர் பலகைகளை தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி நேற்று ஆய்வு செய்தார்.தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் அன்பு செழியன் (திருப்பூர் பொறுப்பு), நல்லூர் நகராட்சியில் நேற்று ஆய்வு செய்தார். தமிழ் மொழியை, நகராட்சியில் பயன் படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்தார். நகராட்சியின் பதிவியல் ஏடுகள், இதர எழுத்து ஆவணங்கள், பெயர் பலகைகள், கடிதங்கள், அறிவிப்புகள், கையொப்பம் என அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்தார்.
அன்புசெழியன் கூறுகையில், “”அனைத்து ஆவணங்கள் முதல் கையொப்பம் வரை தமிழில் இருக்க வேண்டும். ஆவ ணங்களில் தமிழ் மொழியை பயன் படுத்துகிறார்களா என ஆண்டுக்கு ஒருமுறை நகராட்சி அலுவலகங்களில் ஆய்வு செய்யப்படும். அதன்படி, நேற்று ஆய்வு செய்தோம்,” என்றார்.