தினமலர் 11.03.2010
அரசின் சிறப்பு திட்டத்தில் தியாகதுருகம் பேரூராட்சி
தியாகதுருகம் : தியாகதுருகம் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது.பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கூட் டத்திற்கு பேரூராட்சி தலைவர் அருணா மணி மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பொன் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் பழனி வரவேற்றார். நடப்பு 2010-11ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் தியாக துருகம் பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான திட்டப்பணிகளை தேர்வு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அனைத்து கவுன்சிலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.