தினமலர் 12.03.2010
பேரூராட்சி கூட்டம்
பாலமேடு: பாலமேடு பேரூராட்சி கூட்டம் தலைவர் பிரேமா தலைமையில் நடந்தது. நிர்வாக அதிகாரி ஷீலான்பானு முன்னிலை வகித்தார். இம்மாத இறுதிக்குள் குழாய் வரி, வீட்டு வரியை நூறு சதமாக வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றினர். துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார.