தினமலர் 18.03.2010
புதுகையில் நாளை முதல் 3 நாட்களுக்கு குடிநீர் ‘கட்‘
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் நாளை முதல் 3 நாட்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது. இது குறித்து நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் காவிரி குடிநீர் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோக குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (19ம் தேதி) முதல் 21ம் தேதி வரை குடிநீர் விநியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.