தினமலர் 18.03.2010
பொன்னமராவதி பேரூ.,கூட்டம்
பொன்னமராவதி:பொன்னமராவதி பேரூராட்சி அவசர கூட்டம் நடந்தது. பேரூராட்சித் தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி எழுத்தர் உமாதேவி தீர்மானங்களை படித்தார்.
அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வலம்பர்1ம் நம்பர் ரோடு, இன்ஸ்பெக்டர் அலுவலகம் முதல் வலையப்பட்டி போஸ்ட் ஆபீஸ் வரை வடிகால் கட்டுவது, தார்சாலை அமைப்பது, தெருவிளக்குகள் அமைப்பது, அமரகண்ட ஊரணியில் தடுப்புசுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
பேரூராட்சி கவுன்சிலர்கள் காளிதாஸ், ராஜா, உமாதேவி, சுரேஷ், கிருஷ்ணவேணி, பொன்னம்மாள், ஜெயமணி, ராமன், லட்சுமி, வெங்கடேஷ் உட்பட பலர்கலந்து கொண்டனர