தினமலர் 19.03.2010
விண்ணப்பித்த 30 நாட்களில் கட்டட ஒப்புதல் : கருத்தரங்கில் தகவல்
மதுரை: ”விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கட்டட ஒப்புதல் நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,” என திருநெல்வேலி பாலா கன்சல்டன்ஸ் பொறியாளர் பழனிவேல் பேசினார்.இந்திய மதிப்பீட்டாளர்கள் சங்கம் சார்பில், மதுரையில் நடந்த நகரமைப்பு விதிகள் பற்றிய கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கட்டட ஒப்புதல் நகர் ஊரமைப்புத்துறை இயக்குனர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பத்திரம், வில்லங்கச்சான்று, ஒப்புதல் மனைப்பிரிவு, சர்வே வரைபடம், தீயணைப்புத்துறை சான்று, உறுதிச்சான்று, 100 மீட்டர் சுற்று சார்பு வரைபடம் உட்பட 19 வகை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூர் திட்டக்குழும அலுவலர்கள் இதை சரிபார்த்து வாங்க வேண்டும். இதற்காக தமிழக அரசு <http://http:// www.tn.gov.in/ dtcp >என்ற இன்டர்நெட் முகவரியை துவக்கியுள்ளது. இதில் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என அறியலாம். மேலும், 2004 க்கு பின் ஒப்புதல் அளித்த லே–அவுட், மனைப்பிரிவு வரைபடம் இதில் உள்ளது. புகார்களை அதில் அனுப்பலாம் என்றார். தலைவர் பாலாஜி, செயலாளர் அசோக், இணைச் செயலாளர் கண்ணன் பங்கேற்றனர்.