தினமலர் 01.04.2010
செம்மொழி மாநாட்டு பணிகள் திருப்திகரம் : மாநகராட்சி கூட்டத்தில் கலெக்டர் பெருமிதம்
கோவை : ”மாநகராட்சி மேற்கொண்டு வரும் செம்மொழி மாநாட்டு பணிகள் திருப்தியாக உள்ளன,” என, கோவை மாநகர மேம்பாட்டுக்கு குழு கூட்டத்தில் கலெக்டர் உமாநாத் பேசினார். கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மேம்பாட்டுக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் உமாநாத் பேசியதாவது: உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கடந்த கூட்டத்தில் பேசினோம். அப்போது, பணிகள் துவக்க நிலையில் இருந்தது; தற்போது முடியும் தருவாயில் உள்ளது. சில பணிகள் முடிந்துள்ளன. அனைத்து பணிகளுக்கும் அரசாணை, நிர்வாக அனுமதி அனைத்தும் கிடைத்து விட்டது. இனி எந்த நிலையிலும் அரசை குறை கூறமுடியாது. பணிகளை செயல்படுத்தும் நிலையில் உள்ளோம்.
பணிகளுக்கு தேவையான நிதியை போதுமான அளவிற்கு அரசு வழங்கியுள்ளது. தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் நடைபாதை பூங்கா, பஸ் ஷெல்ட்டர் போன்றவற்றிற்கும் அனுமதி, நிதி வந்துள்ளது. எவ்வித தாமதமும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கழிப்பிடம் அமைப்பது, பூங்கா, நடைபாதை, இணைப்புசாலை போன்ற பணிகளையும் மாநகராட்சி மேற்கொண் டுள்ளது. மாநாட்டு ஊர்வலம் நடக்க போலீசார் ‘ரூட்மேப்‘ அமைத் துள்ளனர்.
இந்த ரோட்டில், நடக்கும் பணிகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகள் போலீசாரோடு இணைந்து விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்ளூர் திட்டக்குழுமம் கோவையில் 13.25 கோடியை மூன்று இணைப்பு சாலைகளுக்கு வழங்கியுள்ளது. அப்பணிகளை வேகமாக முடித்து தமிழகத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். 60 நடமாடும் கழிப்பிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற் காலிக சிறுநீர் கழிப்பிடங்கள் ஏற்படுத்த வேண்டும். மாநாட் டிற்கு வருவோருக்கு போதுமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாதிரி பஸ்ஷெல்ட்டர் கண்கவரும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. கோவை மாநகராட்சி செம்மொழி மாநாட்டு பணிகளில் திருப்திகரமான துவக் கத்தை மாநகராட்சி கொடுத் துள்ளது. தொடர்ந்து செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்ப்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். அனைத்து பணிகளையும் ஜூன் முதல் நாள் முடிக்க குறிப் பிட்டுள்ளோம். அதற்கு முன்னதாகவே பணிகளை நிறைவு செய்வது நல்லது இவ்வாறு கலெக்டர் உமாநாத் பேசினார்.
கூட்டத்தில் மேயர் வெங்கடாசலம், மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், செம்மொழி மாநாட்டு தனி அலுவலர் பிரபாகரன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சுப்ரமணியன், பி.எஸ்.என்,எல் டிவிசனல் மேலாளர்கள் ஷபி, நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.