தினமலர் 17.04.2010
மின்மயமாக்கும் திட்டத்தில் 500 குடிசைகளுக்கு இணைப்பு
சிவகங்கை : குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும், மத்திய அரசின் திட்டத்தில், 500 குடிசைகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு, இலவச இணைப்பு வழங்கப்படுகிறது. இதன்படி, புதிய மீட்டர், 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு பொருத்தப்படும். மாவட்டத்தில் எஸ். புதூர், திருப்புத்தூர், கண்ணங்குடியில் 13 கிராமங்களில், 500 குடிசைகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 40 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட் டுள்ளது.மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் யதீந்திரன் கூறுகையில், ”இத்திட்டத்தில் விண் ணப்பித்த அனைவருக்கும் நான்கு மாதங்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். இணைப்பு பெற்றவர்கள், நிர்ணயித்த அளவில் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இதுவரை விண்ணப்பிக்காத, குடிசைவாழ் மக்கள், தற்போது விண்ணப்பித்தால் இணைப்பு வழங்கப்படும்,” என்றார்.