தினமலர் 22.04.2010
தமிழில் பெயர் பலகை அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம் : தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் தமிழில் பெயர் பலகை வைக்காத 75 கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
விழுப்புரம் மாவட் டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைத் துள்ளனரா என தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தமிழில் பெயர் பலகை வைக்காமல் ஆங்கிலத்தில் எழுதிய 75 வர்த்தக நிறுவனங்கள் கண்டறியப் பட்டன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் தமிழில் எழுத அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.