தினமலர் 22.04.2010
மின் மோட்டார் வைத்து தண்ணீர் திருட்டு : உடுமலை நகராட்சி எச்சரிக்கை
உடுமலை : குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிக்கப்படும் என உடுமலை நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.உடுமலை நகராட்சி பகுதியில், 33 வார்டுகளில் 9 ஆயிரம் தனியார் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், அனைத்து பகுதிகளுக்கும் போதிய அளவு குடிநீர் கிடைக்காத நிலை நீடிக்கிறது. திருமூர்த்தி அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பு திருப்தியாக இருந்தாலும், முறையான பராமரிப்பு இல்லாததால் உடுமலை நகரில் குடிநீர் பற்றாக்குறை தொடர்கிறது.நகராட்சி கமிஷனர் சுந்தராம்பாள் வெளியிட்டுள்ள அறிக்கை : நகராட்சி யிலுள்ள 33 வார்டுகளிலும் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடைகாலமாக இருப்பதால் நீர் வரத்து குறைவாக உள்ளது. நகராட்சியின் மேடான பகுதிகளுக்கு குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. மேலும், மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சப்படுவதால் சரிவர அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால், மின் மோட்டார் வைத்து நீர் உறிஞ்சும் இணைப்புதாரர்களின் இணைப் புகள் முன்னறிவிப்பின்றி துண்டிக்கப் பட்டு, மறு இணைப்பு வழங்கப் படாமாட்டாது. மின் மோட் டார்கள் நகராட்சியின் மூலம் பறிமுதல் செய்யப் படுவதோடு, அபராதமும் விதிக்கப் படும்.’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.