தினமலர் 29.04.2010
வி.கே.புரத்தில் வரிவசூல் செய்த பணியாளர்களுக்கு பரிசு
விக்கிரமசிங்கபுரம் : விக்கிரமசிங்கபுரத்தில் கூடுதல் பொறுப்பேற்று அனைத்து வரி இனங்களையும் வசூல் செய்த நகராட்சி பணியாளர்களை பாராட்டி நகராட்சி தலைவர் மாரியப்பன் கைக்கடிகாரம் வழங்கினார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் போதுமான வரிவசூல் இல்லாத நிலையில் நகராட்சிக்கு வரவேண்டிய வரி இனப்பணம் வசூலாகாத நிலை இருந்து வந்தது. வரிவசூலை தீவிரப்படுத்த எண்ணிய நகராட்சி நிர்வாகம் நகராட்சி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பை வழங்கினர். நகராட்சி வரிவசூல் சங்கரநாராயணன் தலைமையில் வாட்டர் சப்ளை பணியாளர்கள் கூடுதல் பொறுப்பேற்று சிறப்பாக வரி இன வசூல் செய்தனர்.இவர்களை பாராட்டி நேற்று விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் வரிவசூல் செய்தவர்களுக்கு ஊக்கப் பரிசாக கைக்கடிகாரம் வழங்கி பாராட்டினார். நகராட்சி நிர்வாக அதிகாரி முருகன், துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட கவுன்சிலர்கள் பலர் உடனிருந்தனர்.