தினமலர் 30.04.2010
கம்பத்தில் ரூ.50 லட்சத்தில் மின்மயானம் அமைக்க முடிவு
கம்பம்:கம்பம் நகராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் மின்மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இதற்கென மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, இயக்குநரின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கம்பத்தில் ஆங்கூர்பாளையம் ரோட்டில் உள்ள பழைய குப்பைக் கிடங்கில் பொதுமயானம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த மயானத்தை பயன்படுத்த ஒருவரும் முன்வரவில்லை. காரணம் எரியூட்டும் மயானமாக அமைக்கப்பட்டது. இதே பகுதியில் நகராட்சி நிர்வாகம் பொதுமயானம் அமைக்கப்பட்ட வளாகத்திலேயே மின்மயானம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் இதற் கென திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளின் இயக்குனருக்கு மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்மயானம் அமைக்க ஆகும் செலவு முழுவதையும் மானியமாக வழங்க அரசுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘அரசிடமிருந்து முழு மானியம் கிடைக்கவில்லை என்றால், பொது நிதியில் இருந்து 50 சதவீதம் செலவழித்து மின்மயானம் அமைக்கப்படும்‘ என்றனர்.