தினமலர் 03.05.2010
கரூர் இரட்டை வாய்க்கால் திட்டம் 1998-99ல் வந்தது; எம்.பி., தகவல்
கரூர்: ”கரூர் நகராட்சி பகுதியில் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு திட்டம் கடந்த 1998-99ல் கொண்டு வரப்பட்டது,” என கரூர் எம்.பி., தம்பிதுரை குற்றம்சாட்டினார். கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரூர் எம்.பி., தம்பிதுரை பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தாந்தோணி நகராட்சி பகுதியில் துவங்கிய சுற்றுப்பயணம், வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், ப.ஜெயங்கொண்டம், கிருஷ்ணராயபுரம், மாயனூர், புலியூர், தொழில்பேட்டை, அரசு காலனி, வாங்கல், கடம்பங்குறிச்சி, தளவாபாளையம் மற்றும் தோட்டக்குறிச்சியில் நிறைவடைந்தது. அதன்பின், எம்.பி., தம்பிதுரை கூறியதாவது: கரூர் நகராட்சி பகுதியில் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு திட்டம் கடந்த 1998-99ல் நான் எம்.பி.,யாக இருந்தபோது திட்டமிடப்பட்டது.
பின்னர் தொடர்ந்து மத்தியில் ஆட்சி பொறுப்பில் நாங்கள் இல்லாததால் எங்களால் நேரடியாக செயல்படமுடியவில் லை. தற்போது அ.தி.மு.க., எதிர்கட்சியாக உள்ளதால் அரசுக்கு கோரிக்கைதான் வைக்கமுடியும். கோரிக்கை மூலம் கரூர்–சேலம் அகல ரயில்பாதைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறமுடிந்தது. அரசு திட்டத்தை எவரும் நேரடியாக சொந்த நிதியில் செய்ய முடியாது. சம்மந்தப்பட்ட திட்டத்துக்கு நிதியளிப்பதானால், அரசுக்கு செலுத்தி பணி செய்ய வேண்டும். கரூர் முன்னாள் எம்.பி., பழனிசாமி தவறான வாக்குறுதியால், தவறான பிரச்சாரம் செய்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக அதிகம் மணல் எடுப்பதால்தான் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லை. லோக்சபாவில் மே ஐந்தாம் தேதி கனிம வளம் திருட்டு குறித்து விவாதம் நடக்கவுள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படும் மனுக்கள் மீதா ன நடவடிக்கை குறித்து கண்காணிக்கப்படும். லோக்சபா தொகு தி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இ ந்த தொகையை தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளிலும் பரவலாக செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறுகூறினார்.கரூர் அ.தி.மு.க, மாவட்ட செயலாளர் செந்தில்பாலாஜி உடனிருந்தார்