தினமலர் 03.05.2010
கலங்கலான குடிநீர் கூடலூரில் சப்ளை
கூடலூர் : கூடலூரில் குடிநீர் கலங் கலாக சப்ளை செய்யப் பட்டு வருகிறது. பெரியாற்று நீரை லோயர் கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பம்ப் செய்து கூடலூர், கம்பம் உட்பட பகுதிகளுக்கு சப்ளை செய்கின்றனர். சில தினங்களாக பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வெளியேறும் மழை நீர் பெரியாற்றில் கலந்து கலங்கலாகியுள்ளது. கலங்களை முழுமையாக பில்டர் செய்யும் அளவுக்கு இந்த குடிநீர் திட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் இல்லை.
எனவே சுகாதாரத்துறையினர், ‘திடீரென கலங்கிய நிலையில் வரும் நீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளோரினேசன் செய்து குடிநீர் சப்ளை செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்‘ என்றனர்.