தினமணி 06.05.2010
திண்டிவனம் நகர்மன்றத்தில் முப்பெரும் விழா
திண்டிவனம், மே 5: திண்டிவனம் நகர்மன்றத்தில் புதன்கிழமை முப்பெரும் விழா நடைபெற்றது.
÷பொன்விழா நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழா, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில் நகராட்சி துப்புரவு அலுவலர் ஆர்.பாலச்சந்திரன் வரவேற்றார். நகராட்சி ஆணையர் ரா.முருகேசன் தலைமை வகித்தார். சிஎஸ்சி மற்றும் டிசிஎஸ்டி கம்ப்யூட்டர் நிறுவனத்தினர் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தனர்.
÷இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் குழுக்களுக்கு நகர்மன்றத் தலைவர் அ.பூபாலன் சுழல்நிதி வழங்கி சிறப்புரையாற்றினார். திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறித்து சுகாதார ஆய்வாளர் ஜோதிபாசு விளக்கமளித்தார். நகராட்சி சமுதாய அமைப்பாளர் ப.ஜெயபிரபா நன்றி கூறினார்