தினமலர் 15.05.2010
வயிற்றுப்போக்கு பரவுவதை தடுக்க காய்ச்சிய நீரை குடிக்கணும்: கலெக்டர்
திருச்சி: ‘வயிற்றுப்போக்கு நோயை தடுக்க நன்கு காய்ச்சிய குடிநீரையே குடி க்க வேண்டும்‘ என திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் காரணமாக பல்வேறு விதமான நோய்கள் பரவுகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வயிற்றுப்போக்கு நோய் இருப்பதாக தெரிகிறது. திருச்சி மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கையாக சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நோயின் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், நகர்நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நோய்கட்டுப்பாடு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கண்காணிப்பு பணியும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் குறிப்பிட்ட காலங்களில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, குடிநீரில் எஞ்சிய குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கீழ்கண்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
* சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்த வேண்டும்.
* நன்கு காய்ச்சிய குடிநீர் மற்றும் கு ளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாக்க ப்பட்ட குடிநீரையே அருந்த வேண்டும்.
* அழுகிய பொருட்கள், பழைய சாத ம், ஈ மொய்த்த திண்டபண்டங்கள் மற்று ம் திறந்தவெளியில் விற்கப்படும் திண்பண்டங்களை தவிர்த்திடுதல் வேண்டும்.
* வயிற்றுப்போக்கிற்கான அறிகுறி தென்படுமாயின் உடன் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சைப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.