தினகரன் 21.05.2010
தானே மாநகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமனம்
மும்பை,மே 21: தானே மாநகராட்சி கமிஷனர், பெஸ்ட் கமிட்டி தலைவர் உட்பட 28 ஐஏஎஸ் அதிகாரி களை அரசு அதிரடியாக மாற்றியுள்ளது.
மகாராஷ்டிரா அரசு அதிரடியாக 28 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள் ளது. இதில் பெஸ்ட் கமிட்டி தலைவராக இருந்த உத்தம் கோபர்கடே ஆதிவாசிகள் மேம்பாட்டுத்துறை முதன் மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
தானே மாநகராட்சி தலைவராக இருந்த நந் குமார் பொது நிர்வாகத்துறை யின் விமான போக்குவரத்து பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இருந்த இடத்திற்கு மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் ராஜீவ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் அலுவலக இணை செயலாளர் சி.வி. சந்திர சேகர் ஓக் மும்பை மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பெஸ்ட் தலைவராக பி.குப்தா நியமிக்கப்பட்டுள் ளார். நாக் பூர் மாநகராட்சி கமிஷனராக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப் பட் டுள்ளார்.