தினமலர் 24.05.2010
அனகாபுத்தூருக்கு ரூ.55 கோடியில்பாதாள சாக்கடை, குடிநீர் திட்டம்
அனகாபுத்தூர் : “”அனகாபுத்தூர் நகராட்சியில், 35 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும், 20 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டப் பணிகளும் விரைவில் துவங்கப்படும்,” என்று அமைச்சர் அன்பரசன் கூறினார்.அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகத்திற்கு, 50 லட்ச ரூபாய் மதிப்பில், புதிய அலுவலக கட்டடமும், 58 லட்ச ரூபாய் மதிப் பில், அறிஞர் அண்ணா பேருந்து நிலையமும் கட்டப்பட்டுள்ளது.
இதற் கான திறப்பு விழா நடந் தது.விழாவில் நகராட்சி தலைவர் பாரதிகுமார் வரவேற்றார். காஞ்சிபுரம் கலெக்டர் (பொறுப்பு) சிவராசு தலைமை தாங்கினார்.நகராட்சி அலுவலக கட்டடத்தை, திறந்து வைத்த, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் பேசுகையில், “அனகாபுத்தூர் நகராட்சியில், 35 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும், 20 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த குடிநீர் திட்டப் பணிகளும் விரைவில் துவங்கப்படும்.இந்நகராட்சியில், 2.48 கோடி ரூபாய் மதிப்பில், 189 புதிய வீடுகள் தேசிய நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வருகிறது. அனகாபுத்தூர் – தரப்பாக்கம் இடையிலான பாலம் கட்டும் பணிகள், இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.நந்தம்பாக்கம் – மணப் பாக்கம் இணைப்பு பாலம் கட்டும் பணிகள், விரைவில் துவங்கப்படும்.
பல்லாவரம் ரேடியல் சாலை மேம்பாலம், ஜூன் மாத இறுதிக்குள் திறக்கப் படவுள்ளது.பஸ் ஸ்டாண்டை திறந்து வைத்து, ஸ்ரீபெரும் புதூர் தொகுதி எம்.பி., டி.ஆர்.பாலு பேசுகையில், “கடந்த ஆண்டு எம்.பி., நிதியாக வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபாயில், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு பணிகள் நடத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள் ளது.இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த, 2 கோடி ரூபாயில், தாம்பரத்தில் அண்டர் கிரவுண்டு கேபிள் சிஸ்டத்திற்காக, ஒரு கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்படும்,’ என்றார்.விழாவில் தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தண்டபாணி, மரபுசாரா எரிசக்தி ஆலோசனைக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நகராட்சி துணைத் தலைவர் மகேஸ் வரி பாண்டியன், செயல் அலுவலர் முனியாண்டி, பொறியாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 50 பேருக்கு கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கான, அடை யாள அட்டை வழங்கப் பட்டது.