தினகரன் 31.05.2010
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இன்று கடைசி நாள்
சென்னை, மே 31: வணிக நிறுவனம் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க மாநகராட்சி வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.
சென்னையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் மே 31&ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அவ்வாறு வைக்காத நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி, திருவல்லிக்கேணி, அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க இன்று கடைசி நாள். தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளை நாளை முதல் அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.