தினகரன் 01.06.2010
திண்டிவனத்தில் 195 கைப்பம்புகளில் பழுதுநீக்க நடவடிக்கை நகராட்சி கூட்டத்தில் முடிவு
திண்டிவனம், ஜூன் 1: திண்டிவனத்தில் 195 கைப்பம்புகளின் பழுதை நீக்க நகராட்சி முடிவு செய்துள் ளது.
திண்டிவனம் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகர் மன்ற தலைவர் பூபா லன் தலைமை தாங்கினார். நடந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர் மற்றம் நகராட்சி பொறியாளர்களின் தினசரி நாட்குறிப்பேடு மன்றத்தின் பார்வைக்கு வைப்பது என்ற தீர்மானம் கடந்த மாத கூட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தீர்மானம் இந்த மாதம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சியில் உள்ள உரக் கிடங்கில் உரம் தயாரிக்க சுய உதவி குழுக்களுக்கு இடம் வழங்குவது, நகராட்சி யில் உள்ள 195 கைபம்புக ளில் உள்ள பழுதுகளை சரிசெய்வது, குடிநீர் பைப்பு களை சரிசெய்வது, புதியதாக குடிநீர் குழாய் அமைப்பது, நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணிபுரியும் நாராயணன் என்பவருக்கு வெளிப்புற அலுவலக பணியின் காரணமாக சென்று வர வாகன முன்பணம் ரூ25000 வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.