தினகரன் 01.06.2010
30 நிமிடத்தில் முடிந்த நகராட்சி கூட்டம்
உடுமலை, ஜூன்1:உடுமலை நகராட்சி கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது. உடுமலை நகரமன்ற கூட்டம் நேற்று மாலை நடந்தது. தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜவகர், நகர் நல அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். வளர்ச்சி பணிகள் மற்றும் வரவு செலவு குறித்து விவாதம் நடந்தது. மொத்தம் 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரு தீர்மானம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை. ஒரு கவுன்சிலர் கூட பேசவும் இல்லை. இதனால் கூட்டம் 30 நிமிடத்தில் முடிந்தது