தினமலர் 04.06.2010
மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா அறிக்கை
கோவை மாநகராட்சியின் மேற்கு, தெற்கு, வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் சிறுவாணி குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள சூழலில் அவசர அவசியம் கருதி, சிறுவாணி குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்கிறது.நாளை ஒரு நாள் குடிநீர் வினியோகம் கோவை மாநகராட்சியின் மேற்கு, தெற்கு, வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் இருக்காது. அடுத்த நாள் முதல் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுவரை பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். குடிப்பதற்கு தவிர மற்ற பயன்பாட்டுக்கு கிணற்று நீரினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.