தினகரன் 04.06.2010
சிறுவாணி நீர் மட்டம் சரிவு 10 நாள் வரை சமாளிக்கலாம்கோவை
, ஜூன் 4:சிறுவாணி அணையின் நீர் மட்டம், கடைசி கட்டத்தை எட்டி விட்டது. இன்னம் 4 மீட்டர் மட்டுமே குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்திற்கு, அணையின் இதர பகுதியிலிருந்து சிறு வாய்க் கால் அளவிற்கு மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் 2 மீட்டர் உயரத்திற்கு மட்டுமே தடையின்றி குடிநீர் பெறமுடியும். நீரேற்று நிலையத்தின் வால்வு பகுதியில் நீரை திருப்பி விட்டால் தான், கூடுதலாக ஒரு வாரத்திற்கு குடிநீர் பெற முடியும். 20ம் தேதி வரை சமாளிக்க முடியும். கூடுதலாக குடிநீர் எடுத்தால், அதாவது தினமும் 8 கோடி லிட்டர் அளவிற்கு குடிநீர் எடுத்தால், 15ம் தேதி வரை மட்டுமே குடிநீர் பெற முடியும்.குடிநீர் வாரியத்தினர் கூறுகையில்
, “வரும் 10ம் தேதி பருவ மழை துவங்கி விடும். அணை வறண்டு போக வாய்ப்பில்லை. கடந்த ஆண்டும் இதே நிலை தான் இருந்தது. விரைவில் மழை பெய்து அணை நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்,” என தெரிவித்தனர்.