தினகரன் 10.06.2010
திருப்போரூர் பேரூராட்சி வணிக வளாக கடைகள் ஏலம்
திருப்போரூர், ஜூன் 10: திருப்போரூர் பேரூராட்சி கட்டியுள்ள வணிக வளாக கடைகள் நேற்று ஏலம் விடப்பட்டன.திருப்போரூர் பஸ் நிலையம் அருகில் 10 கடைகளை பேரூராட்சி கட்டியுள்ளது. இந்தக் கடைகளுக்கான ஏலம் நேற்று நடத்தப்பட்டது. மாத வாடகைக்கு விரும்பியவர்கள் முன்பணமாக ரூ.1 லட்சம் செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் செயல் அலுவலர் கேசவன் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டது.
1 வது கடை மாத வாடகை ரூ.7,000, 2 மற்றும் 3 வது கடை தலா ரூ5,100, 4 வது கடை ரூ.3,900, 5வது கடை ரூ.7,100, 6 வது கடை ரூ.6,900, 7வது கடை ரூ.6,000, 8வது கடை ரூ. 7,800, 9 வது கடை ரூ.3,500, 10வது கடை ரூ.2,600க்கு ஏலம் போனது. இந்த மாத வாடகை தொகையை விட கூடுதலாக ஏலம் கேட்க விரும்புவோர், 7 நாட்களுக்குள் மனு செய்யலாம் என்று செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.