தினகரன் 15.09.2010
சோலார் நகரங்களாக மாறுகிறது தானே, கல்யாண்&டோம்பிவலி
தானே, செப். 15: தானே, கல் யாண்&டோம்பிவலியை சோலார் நகரங்களாக மாற்றும் திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.
மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரிய சக் தியை (சோலார்) பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த நாடு முழுவ தும் சிறு நகரங்களை சோலார் நகரமாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நகரங்களில் தானே, கல்யாண்&டோம்பி வலி ஆகிய நகரங்கள் அடங் கும். இந்த நகரங்களை சோலார் நகரங்களாக மாற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் செய்யவுள்ளது. இது குறித்து மத்திய புதிய மற்றும் புதுப் பிக்கத்தக்க எரிசக்தி அமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
அடுத்த இரண்டரை ஆண்டுகளில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்தியாவின் திறனை 50 மெகாவாட்டில் இருந்து 1,300 மெகாவாட் ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 60 மாநகராட் சிகளில் இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக தானே, கல்யாண்&டோம்பிவலி உள் ளிட்ட நகரங்களுக்கு தலா ரூ50 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது உள்ளாட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும். இந்த நிதியை பயன்படுத்தி சிறப்பு சோலார் பிரிவு அமைப்பது, இலக்கை நிறைவேற்ற மாஸ்டர் பிளான் தயாரிப்பது மற்றும் சோலார் நகர திட் டத்தை பிரபலப்படுத்தும் நட வடிக்கை மேற்கொள்ளப் படும். மகாராஷ்டிராவில் இருந்து 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவுரங் கபாத், நாசிக் மற்றும் நான் டெட் ஆகிய நகரங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப் படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.