தினகரன் 28.06.2010
வசாய்&விரார் மாநகராட்சி தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது
வசாய், மே 28: வசாய்&விரார் மாநகராட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை யுடன் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிர சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிதாக உருவாக்கப் பட்ட வசாய்&விரார் மாநகராட்சிக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.
மொத்தமுள்ள 89 வார்டுகளில் 383 வேட் பாளர்கள் களத்தில் உள்ள னர். தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி கள் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டி யிடு கின்றன.
ராஜ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா 17 இடங் களில் மட்டும் தனது வேட் பாளர்களை நிறுத்தியுள் ளது. இத்தேர்தலில் அனைத்து பிரதான கட்சி கள் போட்டியிட் டாலும் உள்ளூர் கட்சிகளான பகுஜன் விகாஸ் அகாடி மற்றும் வசாய் ஜன் ஆந் தோலன் ஆகிய கட்சிகள் தான் இந்த மாநகராட்சியில் பலம் வாய்ந்த இயக்கங்களாக விளங்கி வருகின்றன.
வசாய் ஜன் ஆந்தோலன், சிவசேனா, பாரதிய ஜனதா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின் றன என்பதால் இப்போ தைக்கு இந்த கூட்டணியின் கையே ஓங்கி இருப்பதாக கருதப்படுகிறது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டி யிடுவது சிவசேனா கூட் டணிக்கு சாதகமாக அமை யலாம் என்று கூறப் படுகிறது.
பகுஜன் விகாஸ் அகாடி யின் தலைவர் ஹிதேந்திர தாக்கூர், வசாய், விரார் பகுதிகளில் தனி செல்வாக் குடன் விளங்கி வருகிறார். இதே போல வசாய்&விரார் மாநகராட்சியில் கிராமங் களை இணைக்க தொடர் போராட்டம் நடத்தியதன் மூலம் மக்களிடையே செல் வாக்கை பெற்றிருக்கும் விவேக் பண்டிட் எம்.எல்.ஏ தலைமையிலான வசாய் ஜன் ஆந்தோலன் கட்சி, பகுஜன் விகாஸ் அகாடிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை தேர் தலில் வசாய் தொகுதியில் ஹிதேந்திர தாக்கூரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் விவேக் பண்டிட். புதிதாக உருவாக் கப்பட்டிருக்கும் இந்த மாநக ராட்சியில் குடிநீர் தட்டுப் பாடு, மின் வெட்டு ஆகி யவை முக்கிய பிரச்னை களாக விளங்குகின்றன.
இந்த பிரச்னைகளை மையப்படுத்தியே அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்து வருகின்ற னர். இன்று மாலை 5 மணி யுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் அனைத்து கட்சி களின் முக்கிய தலைவர் களும், வேட்பாளர்களும் கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர்.
இதற்கிடையே தேர்தலுக் காக 89 வார்டுகளில் 608 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 77 வாக்குச்சாவடிகள் பதற்றம் வாய்ந்தவையாக அறிவிக்கப் பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. திங்கள் கிழமையன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படு கிறது.