தினகரன் 02.08.2010
மக்களின் அச்சத்தை போக்க பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்ட மேயர், கமிஷனர் பிம்ப்ரி&சிஞ்ச்வாட்டில் விழிப்புணர்வு முகாம்
புனே, ஆக. 2: பன்றி காய்ச்சல் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷ னர் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர்.
பன்றி காய்ச்சல் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டம் நிலவி வருவதால் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மாநகராட்சி சார்பில் கடந்த வெள்ளியன்று முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த முகாமில் பிம்ப்ரி& சிஞ்ச்வாட் மேயர் யோகேஷ் பேஹ்ல், மாநகராட்சி கமிஷனர் ஆஷிஸ் ஷர்மா, நிலைக்குழு தலைவர் பிரசாந்த் ஷிடோலே, சட்ட கமிட்டி தலைவர் காலுராம் பவார், மாநகராட்சி அவை ஆளும் கட்சி தலைவர் ஜக்தீஷ் ஷெட்டி, ‘பி’ மண்டல தலைவர் கணேஷ் போன்ட்வே, சிவசேனா கட்சி கவுன்சிலர்கள் தலைவர் சுலபா உபாலே மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நிலவும் தவறான கண்ணோட்டம் மற்றும் அச்சத்தை போக்கும் வகை யில் முகாமில் கலந்து கொண்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண் டனர்.
இது குறித்து மாநகராட்சி மருத்துவ இயக்குனர் ஆர்.ஆர். ஐயர் கூறுகையில், “பிம்ப்ரி&சிஞ்ச்வாட் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. மாநக ராட்சி அதிகாரிகள் மருத்துவ முகாம்களை நடத்தி பன்றி காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்நோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நோய் பரவலை தடுக்கவும் தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தவும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்தப் பட்டு வருகின்றன. டாக்டர் பரிந்துரைபடி தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் மட்டுமின்றி அது நோய் பவரலையும் தடுக்கும் என்பதை மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.