தினகரன் 08.11.2010
இந்த ஆண்டு இறுதிக்குள் பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் 7 நீரூற்றுகள் அமைக்க திட்டம்
பாந்த்ரா, நவ.8: பாந்த்ரா& குர்லா காம்ப்ளக்சை அழகுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 7 செயற்கை நீரூற்றுகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் (எம்.எம்.ஆர்.டி.ஏ.) திட்டமிட்டுள்ளது.
மும்பையின் வர்த்தக மையமாக விளங்கி வரும் பாந்த்ரா&குர்லா காம்ப்ளெக்சை எம்.எம்.ஆர்.டி.ஏ. கட்டி இருக்கிறது. இந்த இடத்தை மேலும் அழகுபடுத்துவதற்காக 7 செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட உள்ளன. 7 நீரூற்றுகளும் காம்ப்ளக்சுக்குள்ளேயே அமைக்கப்பட உள்ளன. இந்த நீரூற்றுகளையும் செயற்கை குளங்களையும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைக்க இருப்பதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. கமிஷனர் ரத்னாகர் கெய்க்வாட் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பல தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தக வளர்ச்சிக்காக பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சில் அலுவலகங்களை அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த காம்ப்ளக்சை நம்பர் ஒன் வர்த்தக வளாகமாக மாற்றுவதுதான் எம்.எம்.ஆர்.டி.ஏ.வின் நோக்கம். காம்ப்ளக்சை மேலும் அழகுபடுத்தவே செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படுகின்றனÓ என்றார்.
செயற்கை நீரூற்றுகளை அமைக்க முன்வந¢துள்ள நிறுவனங்களில் நபார்டு, நமன் குரூப், ஸ்டேட் வங்கி, ஐ.டி.பி.ஐ., டிரைடெண்ட் ஓட்டல் மற்றும் ரிலையன்ஸ் எனர்ஜி ஆகியவையும் அடங்கும். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இவை அமைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.