Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலங்கள்- சுரங்கபாதைகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

மாலை மலர் 28.07.2009

பாலங்கள்- சுரங்கபாதைகளில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்: மேயர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஜூலை. 28-

சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வரின் ஆணைப்படியும், துணை முதல்வர் அறிவுரைப்படியும் சென்னை மாநகராட்சி சென்னை மாநகரை அழகுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சென்னையில் வரும் 1-ம் தேதி முதல் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் வரைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பராமிப்பில் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே உள்ள மணலிப்பாலம், ஆடம்ஸ் பாலம், சேப்பாக்கம் பாலம், எலியட்ஸ் சாலை பாலம், கிரின்வேஸ் சாலை பாலம், காமராஜர் சாலை பாலம், லேட்டீஸ் பாலம் போன்ற 23 பாலங்களும், கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள 5 பாலங்களும், ஓட்டேரி ஓடையின் குறுக்கே உள்ள 18 பாலங்களும், கேப்டன் காட்டன் கால்வாய் குறுக்கே உள்ள 4 பாலங்களும், மாம்பலம் கால்வாயின் குறுக்கே உள்ள 14 பாலங்களும், நுங்கம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 6 பாலங்களும், கொடுங்கையூர் கால்வாயின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே உள்ள 23 பாலங்களும், டிரஸ்ட்புரம் கால்வாயின் குறுக்கே உள்ள 11 பாலங்களும், பிற கால்வாய்களின் குறுக்கே உள்ள 26 பாலங்களும், இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள 8 பாலங்களும், இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள 13 சுரங்கப்பாதைகளும், 6 பாதசாரிகள் சுரங்கப் பாதைகள், 2 தரைமட்டப் பாலங்களும், 30 உயர்மட்ட நடைப்பாலங்கள், 12 மேம்பாலங்கள் என 223 மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை துறையின் பராமரிப்பில் உள்ள 4 இரயில்வே சந்திக்கடவின் குறுக்கே உள்ள பாலங்கள், 5 கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள், 2 அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள், 2 பக் கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள பாலங்கள், ஒட்டேரி ஓடையின் குறுக்கே எருக்கஞ்சேரி நெடுங்சாலை உள்ள பேசின் பாலம், அண்ணா மேம்பாலம் மற்றும் 12 பாதசாரி சுரங் கப்பாதைகள் என 27 பாலங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் சென்னையில் 250 பாலங்கள், சுரங்கப் பாதைகளில் போஸ்டர்கள் ஓட்டுவதற்கும், சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும் தடைவிதிக்கப்படுகிறது.

மாநகராட்சி மண்டல அலுவலர்கள் இரண்டு நாட்களுக்குள் அந்தந்த பகுதியில் உள்ள ஏஜென்ட்களிடமும் மற்றும் சுவர் ஒட்டும் தொழிலாளர்களிடம் பேசி சுவர் எழுத்துக்கள் எழுதுவதற்கும், போஸ்டர்களை ஒட்டுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எடுத்துரைத்து அறிவுறுத்துவார்கள்.

ஜூலை திங்கள் 31ம் தேதி முதல் மாநகராட்சி மூலம் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையும், வரையப்பட்டுள்ள சுவர் எழுத்துக்களை வெள்ளை அடித்து அழிக்கும் பணியினையும் மேற்கொள்வார்கள். சென்னை மாநகராட்சியின் இந்த அழகுப்படுத்தும் பணிக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.