Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நவீன இறைச்சிக் கூடம்- பண்டக சாலை செயல்பாடு சென்னை மாநகராட்சிக்கு 3 சர்வதேச தரச்சான்று

Print PDF

மாலை மலர் 29.07.2009

நவீன இறைச்சிக் கூடம்- பண்டக சாலை செயல்பாடு சென்னை மாநகராட்சிக்கு 3 சர்வதேச தரச்சான்று

சென்னை, ஜூலை. 29-

சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி தனது சேவை பணிகளில் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்கள் செய்து வருகின்றது.

சென்னை மாநகராட்சி செயல்பாடுகளின் தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி மின்துறை பண்டகச்சாலை மண்டலம்- 4ல், வில்லிவாக்கம் மற்றும் மண்டலம்-9ல் சைதாப்பேட்டை நவீன இறைச்சிக் கூடங்களின் செயல் பாடுகள் மேம்படுத்த வதற்காக ஆலோசனைகள் பெற்று அபிவிருத்தி பணிகள் செய்து சர்வேதேச தரச்சான்றிதழ் (.எஸ்..) பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டது.

இங்கிலாந்தைச் சார்ந்த நிறுவனம் வில்லிவாக்கம் இறைச்சிக் கூடத்தையும், சைதாப் பேட்டை இறைச்சிக் கூடத்தையும், மின்துறை பண்டக சாலையிலும் ஆய் வுகள் மேற்கொண்டது.

சென்னை மாநகராட்சி பண்டகசாலை மற்றும் நவீன இறைச்சி கூடங்களின் செயல்பாடுகள் சர்வ தேச நிர்ணய கோட்பாடுகளின் படி உள்ளதால் அதற்கான உலகதரச் சான்றிதழ்கள் வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச் சிக் கூடங்களுக்கும், மின்துறை மாநகராட்சி பண்டக சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சர்வேதச சான்றிதழ்கள் கிடைக்கப்பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இறைச்சிகூடங்களில் 6 ஆடுகள் அறுக்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அறுக்கப்படும் ஆடுகள் எளி தாக நகருவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆடு அறுக்கும் அறையிலிருந்து வெளி வரும் அறுக்கப்பட்ட ஆடுகளின் தோல் உரித்தல், கழிவுகள் அகற்றுதல் போன்ற பணிகள் வரிசையாக நடைபெற்று பயன்படுத்தப்பட வேண்டிய இறைச்சி பகுதி மட்டும் கடைசி பகுதியில் இறக்கப்பட்டு தண்டவாளத்தில் அமைக்கப் பட்டுள்ள கொக்கிகள் மூலம் ஆடுகள் அனைத்தும் அறுப்பு அறைகள் நோக்கி நகரும் வண்ணம் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதில் சிறப்பு அம்சமாக தனியாக ஆடுகள்தங்கு வதற்கு கூடமும், உள் உறுப் புகள் சுத்தம் செய்வதற்கான இடங்களும், மின் விசிறிகள், முதல் உதவிப் பெட்டிகள், தீயணைப்பு உபகரணங்கள், காட்சிப்பலகைகள் போன்ற வைக்காக சர்வதேச தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று மாநகராட்சி மின் பண்டங்கசாலையில் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனியாக அடுக்குகள், உரிய பதிவேடுகள் பராமரித்தல், மின் விசிறிகள், முதல் உதவிப் பெட்டி, தீயணைப்பு உபகர ணங்கள், காட்சி பலகைகள் அமைப்பதற்காக சர்வதேச தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பெரம்பூரில் நவீன இறைச்சிக்கூடப்பணிகள் ரூ. 60 கோடியில் தொடங்கப் பட்டுள்ளது. இப்பணிகள் 21 மாதத்தில் முடிக்கப்படும், என்றார். பேட்டியின்போது ஆணை யாளர் ராஜேஷ் லக்கானி எதிர் கட்சித்தலைவர் சைதை ப.ரவி உடன் இருந்தனர்.