Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்ய 5 குழுக்கள்

Print PDF

தினமணி 01.08.2009

சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்ய 5 குழுக்கள்

திருப்பூர், ஜூலை 31: உச்ச நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து திருப்பூர் சாய்க்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஆய்வு செய்து அறிக்கைதாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூரை சுற்றிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான சாயஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்து, ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குவதால் சுற்றுவட்டார பகுதியில் விவசாயமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி விவசாயிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாய ஆலை களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்தகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், அதுவ ரை வெளியேறும் கழிவுநீருக்கு லிட்டருக்கு ஆறு காசுகள் வீதம் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர் சங்கம் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், சட்டப்பட்டறைகளுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

தற்போது திருப்பூர் பகுதியில் ரூ.800 கோடி மதிப்பில் 17 கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன.

இப்போது சுத்திகரிப்பு நிலையங்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாயப்பட்ட றை உரிமையாளர்கள் கடந்த பல மாதமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 27-ம் தேதி விசார ணைக்கு வந்தது. அப்போது, கட்டிமுடிக்கப்பட்டுள்ள பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என்று சாயப்பட்டறை சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறி ஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், "சாயப்பட்டறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலை யங்களை ஆய்வு செய்து ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, திருப்பூர் சாயக்கழிவுநீர் பொது சுத்தி கரிப்பு நிலையங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ராமச்சந்திரன் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் தலா 3 பேர் இடம் பெற்றுள்ளனர். திங்கள்கிழமை ஆய்வுப்பணிகளை தொட ங்கும் இக்குழுவினருக்கு ஒருவாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக வாரிய திருப்பூர் மண்டல பொறியாளர் கண்ணன் தெரிவித்தார்.