Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி 32 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்; ஒரு வாரத்தில் காலி செய்ய உத்தரவு

Print PDF

மாலை மலர் 10.08.2009

விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி 32 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்; ஒரு வாரத்தில் காலி செய்ய உத்தரவு

சென்னை, ஆக. 8-

 

சென்னை நகரின் பாரம்பரிய அடையாள சின்னங்களில் ஒன்றாக திகழ்வது விக்டோரியா ஹால் 1888-ல் கட்டப்பட்ட இந்த ஹாலில் சுவாமி விவேகானந்தர், கோபாலகிருஷ்ணகோகலே, பாரதியார், சர்தார் வல்ல பாய்பட்டேல் உள்பட பல மூதறிஞர்கள் உரையாற்றி உள்ளனர்.
இந்த ஹால் பொது நல டிரஸ்டுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 57 கிரவுண்ட் பரப்பளவுள்ள இந்த ஹால் வாடகை ரூ.28 என்பது குறிப்பிடத்தக்கது.
குத்தகை காலம் முடிந்ததும் விக்டோரியா ஹால் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ரூ.3.23 கோடி செலவில் பழமை மாறாமல் விக்டோரியா ஹாலை புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக விக்டோரியா மண்டபத்திற்குள் செயல்படும் தென்னிந்திய அத்லெடிக்சங்கத்தை காலி செய்யும்படி ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் காலி செய்யவில்லை.
இந்த நிலையில் மாநகராட்சி இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. விக்டோரியா ஹாலை சுற்றி இருக்கும் 32 கடைகள் மற்றும் தென் இந்திய அத்லெடிக் சங்கத்துக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்னும் ஒரு வாரத்துக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளனர்.

கெடு முடிவதற்குள் கடைகளை காலி செய்யாவிட்டால் இடித்து தள்ளப்படும் என்று மாநராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கடைகளை அப்புறப்படுத்தியதும் விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி தொடங்கும்.