Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் ""செயற்கைத் தீவுடன் பறவைகள் சரணாலயம்''

Print PDF

தினமணி 18.08.2009

மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் ""செயற்கைத் தீவுடன் பறவைகள் சரணாலயம்''
மதுரை, ஆக. 17: மதுரை வண்டியூர் கண்மாயில் ரூ.25 கோடியில் "செயற்கைத் தீவு' அமைத்து, அதில் பறவைகள் சரணாலயம் அமைக்க மாநகராட்சி மூலம் மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

மதுரை வண்டியூர் கண்மாய் சுமார் 687 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாய்க்கு பருவ காலங்களில் அதாவது ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சாதாரண மற்றும் அரிய வகையான பாம்புதாரா, உல்லான், சிறை ஈ, நத்தை கொத்தி நாரை, பெலிகென்ஸ், பூலைக்கிடாய் என 500-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்து செல்வதாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

இப்பறவைகளுக்கு கண்மாய் பகுதியில் சரணாலயம் அமைத்தால் அவைகள் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளதாக பறவைகள் ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. மேலும், "சர்வதேச பறவைகள் வாழ்வாதாரம்' என்ற அமைப்பின் இந்திய பங்குதாரரான "மும்பை நேட்சுரலிஸ்ட்ஸ் சொûஸட்டி' மதுரை வண்டியூர் கண்மாய், வரிச்சியூர் அருகே உள்ள குன்னத்தூர் கண்மாய் போன்றவற்றை "பறவைகளுக்கான முக்கிய தலமாக' ஐம்ல்ர்ழ்ற்ஹய்ற் ஆண்ழ்க்ள் அழ்ங்ஹ) அறிவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட வனத்துறையினருக்குப் பரிந்துரைத்துள்ளது.

இதன்படி வண்டியூர் கண்மாயை ஆய்வு செய்த வனத்துறை, வண்டியூர் கண்மாயில் "பறவைகள் சரணாலயம்' அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

"செயற்கைத் தீவு': இக் கண்மாயின் மையப் பகுதியில் மணல் தோண்டி அவற்றை 3 மெகா திட்டுக்களாக அமைத்து, திட்டுக்கள் பகுதியில் பறவைகள் தங்கி கூடு கட்டி, இனப்பெருக்கும் செய்ய ஏதுவாக ஆயிரக்கணக்கான கருவேல மரங்கள் உள்ளிட்டவை நடவும், கண்மாய் கரைப் பகுதியில் நீர் மருது, இலுப்பை, அத்தி உள்ளிட்ட மரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனித் தனி திட்டுக்கள் அமைக்கப்படுவதால் கண்மாயில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்து, பொதுமக்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு மையமாக இப்பகுதியை உருவாக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலரும், ஆராய்ச்சியாளருமான டாக்டர் பத்ரி நாராயணன் கூறுகையில், தற்போதைய நிலையில் வண்டியூர் கண்மாய்க்கு 500-க்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. பறவைகளுக்கு கூடு கட்டவும், இனப் பெருக்கம் செய்யும் வகையிலும் சரணாலயம் போல் ஏற்பாடு செய்தால் வெளி நாட்டுப் பறவைகள் உள்ளிட்ட சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இப்பகுதிக்கு வந்துசெல்ல வாய்ப்புள்ளது என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட வன அலுவலர் பாலாஜி கூறுகையில், இக் கண்மாய் பொதுப்பணித்துறைக்கு உள்பட்டதால் சரணாலயம் அமைக்கும் முயற்சிக்கு முதலில் பொதுப்பணித் துறையும், அதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்டவை அனுமதி அளிக்கவேண்டும் என்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன் கூறுகையில், வண்டியூர் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்க ரூ. 25 கோடி மதிப்பிலான திட்டம், மாநகராட்சி மூலம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Tuesday, 18 August 2009 04:58