Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அக். 18-26 வரை பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள்

Print PDF

தினமணி 14.10.2010

அக். 18-26 வரை பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள்

தக்கலை, அக். 13: பத்மநாபபுரம் நகராட்சியில் மக்கள் குறைதீர் நாள் அக். 18-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, நகர்மன்றத் தலைவர் அ. ரேவன்கில் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுமக்கள் குறைதீர் நாளில் அரசு சார்பில் கிடைக்க வேண்டிய ஊனமுற்றோர், முதியோர் ஆகியோர் உதவித்தொகை பெறவும், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வது உள்ளிட்ட எல்லா அரசுத் துறை சார்ந்த உதவிகள் பெறவும், குறைகள் நீக்கவும் மனு செய்யலாம்.

அம்மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே, கீழ்கண்ட தேதிகளில் காலை 10.30 மணிக்கு அந்தந்த வார்டு பகுதிக்குள்பட்ட பகுதிகளில் முகாம்கள் நடைபெறுகின்றன. வார்டு 1, 8-வது வார்டுக்கு 18.10.2010 அன்று சாரோடு சி.எஸ்.. சமுதாய நலக்கூட வளாகத்திலும், 2, 3, 4, 5 ஆகிய வார்டுகளுக்கு 19-ம் தேதி பத்மநாபபுரத்திலுள்ள கல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 6, 7, 12 வார்டுகளுக்கு 20-ம் தேதி மேட்டுக்டை அரசு முஸ்லீம் தொடக்கப் பள்ளியிலும், 9, 10, 11 வார்டுகளுக்கு 21-ம் தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 வார்டுகளுக்கு பழைய நகராட்சி அலுவலக வளாக நகர்மன்றக் கூடத்திலும், 15, 16, 17, வார்டுகளுக்கு 23-ம் தேதி தற்போது செயல்பட்டு வரும் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள நூலகத்திலும், 18, 19 வார்டுகளுக்கு 25-ம் தேதி புலியூர்குறிச்சி பயணிகள் விடுதியிலும், 20, 21 வார்டுகளுக்கு 26-ம் தேதி பயணிகள் விடுதியிலும் மக்கள் குறைதீர் நிகழ்ச்சி நடைபெறும்.