Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்று மாநகராட்சி அவசர கூட்டம்

Print PDF

தினமலர் 20.10.2010

இன்று மாநகராட்சி அவசர கூட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மேலூர் ரயில்வே ஸ்டேஷனை உழவர்சந்தை அருகே மாற்றம் செய்யும் வகையில் மாநகராட்சி இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு ஒப்படைப்பதற்காக இன்று மாநகராட்சி அவசர கூட்டம் நடக்கிறது.தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் கமிஷனர் குபேந்திரன் முன்னிலையில் இன்று நடக்கிறது. இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி, இளநிலை பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், நகரமைப்பு அதிகாரி (பொ) ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர்.தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்கு உட்பட்ட மேலூர் ரயில்வே ஸ்டேஷனை புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே உழவர்சந்தைக்கு தெற்கில் புதியதாக ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். இதற்காக மாநகராட்சி இடத்தை ரயில்வே நிர்வாகத்திற்கு நிலமாற்றம் செய்ய வேண்டி ரயி ல்வே அதிகாரிகளின் கடிதம் மன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு நிலமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ரயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி வழங்கும் நிலத்திற்கு பதிலாக ஆண்டாள் தெருவில் உள்ள ரயில்வே நிர்வாகம் இடத்தை மாநகராட்சிக்கு வழங்குகிறது. இது சம்பந்தமாகவும் இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.