Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

Print PDF

தினமணி 22.10.2010

மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

மதுரை, அக்.21: மதுரை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சிக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு, மாநகராட்சி ஆணையர் எஸ். செபாஸ்டின் தலைமை வகித்தார். பின்னர், அவர் பேசுகையில், தமிழகம் முழுவதும் தற்போது பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமை, மத்திய அரசு மற்றும் ஐக்கிய நாடு வளர்ச்சித் திட்டமும் இணைந்து நடத்துகின்றன. மதுரை, நீலகிரி, திருவள்ளூர், நாகபட்டினம், திருச்சி மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இயற்கைப் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பயிற்சி முகாம் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.

தீ விபத்து, வெள்ளம், மின்கசிவு போன்ற ஆபத்தான நேரங்களில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், பல உயிர்கள் பலியாகின்றன. எனவே, இதுபோன்ற பயிற்சிகள் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இதில், திட்ட அலுவலர் வனிதா படக்காட்சிகளுடன் விளக்கமளித்தார். துணை ஆணையர் தர்ப்பகராஜ், மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, தலைமைப் பொறியாளர் சக்திவேல், கண்காணிப்புப் பொறியாளர் விஜயகுமார், நிர்வாகப் பொறியாளர் மதுரம், மக்கள் தொடர்பு அலுவலர் ரா. பாஸ்கரன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.