Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு

Print PDF

தினமணி 22.08.2009

பேரூராட்சிகளின் இயக்குநர் ஆய்வு

கன்னியாகுமரி, ஆக. 21: கன்னியாகுமரியில் பல்வேறு இடங்களை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி கடற்கரை சுனாமி பூங்கா, தமிழன்னை பூங்கா, காந்தி நினைவு மண்டப பூங்கா, காமராஜர் மணிமண்டப பூங்கா, சூரிய அஸ்தமன காட்சிக் கோபுரம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி உள்ளிட்ட இடங்களை அவர் பார்வையிட்டார்.

மேலும், பரமார்த்தலிங்கபுரத்தில் ரூ.87 லட்சத்தில் அண்மையில் திடக்கழிவு மேலாண் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரிக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.

முன்னதாக, மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் மூலம் நிறைவேற்றப்பட உள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம் கன்னியாகுமரி அரசினர் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இதில் பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திரன் கலந்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் செயற்பொறியாளர் ஆனந்த நடராஜன், உதவி இயக்குநர் (பொறுப்பு) பாலசந்திரன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ராசையா, மாவட்ட சுற்றுலா உதவி அலுவலர் மாலையா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.