Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பணி நியமனத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி ஊழியர் "சஸ்பெண்டு" கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை

Print PDF

மாலை மலர்               26.10.2010

பணி நியமனத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி ஊழியர் "சஸ்பெண்டு" கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை

பணி நியமனத்துக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி ஊழியர் “சஸ்பெண்டு” கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை

சென்னை, அக். 26- சென்னை மாநகராட்சி கல்வித்துறை இளநிலை பயிற்சி அலுவலர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பட்டியல் பெறப்பட்டு நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களின் கோப்புகளை கல்வித்துறை ஊழியர் கிருஷ்ணன் குட்டி என்பவர் பராமரித்து வந்தார். அவர் தேர்வு செய்யப்பட்ட 4 பேரை தொடர்பு கொண்டு தலா ரூ.2 லட்சம் லஞ்சம் தந்தால் பணி நியமன பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று பேரம் பேசினார்.

இதுபற்றி மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணன் குட்டி, அவரது செல்போனிலேயே லஞ்ச பேரம் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து கிருஷ்ணன் குட்டி "சஸ்பெண்டு" செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்தார்.

சஸ்பெண்டு உத்தரவை வழங்குவதற்காக கிருஷ்ணன் குட்டியின் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றனர். அதற்குள் மோப்பம் பிடித்த கிருஷ்ணன் குட்டி வீட்டை பூட்டிவிட்டு கேரளாவுக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டு கதவில் "சஸ்பெண்டு" உத்தரவை அதிகாரிகள் ஓட்டினார்கள்.