Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் ஆலோசனை

Print PDF

தினமலர்                 27.10.2010

மாநகராட்சியில் ஆலோசனை

திருப்பூர்: ஒருங்கிணைக்கப்பட உள்ள திருப்பூர் மாநகராட்சியின் நகர வளர்ச்சி திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம், திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்தது. திருப்பூர் மாநகராட்சியில் தற்போது 52 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியோடு 15 வேலம்பாளையம், நல்லூர் நகராட்சிகள், எட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. "சிட்டி டெவலப்மென்ட் பிளான்' (சி.டி.பி.,) என்ற நகர வளர்ச்சி திட்டம் அடிப்படையில், நகர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் செய்ய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைக்கப்படும் மாநகராட்சியில், நகர வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதற்கான திட்டங்கள் வரையறை குறித்து ஆலோசிக்கப் பட்டது. மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், நகர் நல அலுவலர் ஜவஹர்லால் பங்கேற்றனர்.