Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோபி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேறுமா?

Print PDF

தினமலர்                28.10.2010

கோபி நகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேறுமா?

கோபிசெட்டிபாளையம்: தீர்மானங்கள் ஏதும் சென்ற மாதம் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலையில் கோபி நகராட்சி கூட்டம் நடக்கிறது. தி.மு.., மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று, தீர்மானங்களை மீண்டும் ஒத்திவைப்பரா அல்லது "டிமிக்கி' கொடுப்பரா? என்பது, இன்று தெரியவரும். தமிழக அரசின் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் கோபி நகராட்சி பகுதியில் சாலைகள் அமைக்க நான்கு கோடியே 56 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. .தி.மு.., வை சேர்ந்த கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதிக நிதி ஒதுக்கியதாக, தி.மு.., மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 கவுன்சிலர்கள், கடந்த மாதம் 29 ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை."சாலை மேம்பாட்டு நிதியை அனைத்து வார்டுகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்' எனக் கூறி, தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 ஈரோடு எம்.எல்.., ராஜா, பேச்சுவார்த்தை நடத்தி, அரசிடம் இருந்து கூடுதல் நிதி வாங்கி தருவதாக உள்ளிருப்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் மோசமாக உள்ள ரோடுகள் குறித்த பட்டியலை தயார் செய்து வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு கோபி நகராட்சி கூட்டம் நடக்கிறது. சென்ற முறை கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட, சிறப்பு சாலைகள் குறித்த தீர்மானம் மற்றும் புதிய தீர்மானங்கள் உள்பட 42 தீர்மானங்கள் இன்றைய கூட்டத்திலும் இடம் பெற்றுள்ளன. இதனால், தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஒவ்வொரு கூட்டத்துக்கும் முதல்நாள் தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் தனியாக கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் குறித்து முடிவு எடுப்பது வழக்கம். ஆனால், இன்று நடக்கும் கோபி நகராட்சி கூட்டம் முடிவு குறித்து, நேற்று மாலை 5 மணி வரை தி.மு.., - காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆலோசனை ஏதும் நடத்தவில்லை. இன்றைய கோபி நகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு, தீர்மானங்களை ஒத்திவைக்க ஒருமித்த குரல் கொடுப்பரா; அல்லது வழக்கம் போல் பின்வாங்குவரா? என்பது புரியாத புதிராக உள்ளது.