Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் புதிய கட்டடம்: மேயர் .விளக்கம்

Print PDF

தினமலர் 29.10.2010

மாநகராட்சியில் புதிய கட்டடம்: மேயர் .விளக்கம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் கட்டட அனுமதி வழங்குவது குறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

மாநகராட்சி சட்டம் மற்றும் விதிகளின் படி மாநகராட்சி எல்கைக்குள் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கோ அல்லது இருக்கின்ற கட்டடங்கள் விரிவாக்கம் செய்யவோ சில விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. கட்டட விண்ணப்பத்திற்கு விண்ணப்பிக்கும் போது மனுதாரர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிகாட்டுதல் முறைகள் வெளியிடப்பட்டது. இதுகுறித்து கடந்த 26ம் தேதி நடந்த மாமன்ற கூட்டத்தில் சில வழிகாட்டு முறைகள் பொதுமக்கள் நலன் கருதி தளர்வு செய்யலாம் என கோரிக்கை விடுத்தனர். அந்த வழிகாட்டு முறைகள் குறித்து உரிமம் பெற்ற கட்டட பட வரைவாளர் சங்க பிரதிநிதிகள் மேயரிடம் தங்களது கோரிக்கை குறித்து விவாதித்தனர். அதன்படி மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், விஸ்வநாதன், சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் பேபிகோபால், அப்துல்வகாப், அதிமுக கவுன்சிலர்கள் பாலகிருஷ்ணன், தங்கராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன்படி பொதுமக்கள் நலன்கருதி அனுமதிபெற்ற மனைப்பிரிவுகளுக்கு தாசில்தாரிடமிருந்து தடையின்மை சான்று, விஏஓ பரிந்துரை சான்று, அடங்கல், டவுன் சர்வே ஸ்கேட்ச் ஆகியவை மனுவோடு சமர்ப்பிக்க தேவையில்லை. மனுவோடு நில உரிமைக்குரிய ஆவணத்தின் நகலில் மனுதாரர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திடவேண்டும். அதில் நோட்டரி அட்வகேட் கையெழுத்து பெறவேண்டிய அவசியம் இல்லை. கட்டட இடம் குறித்து தாவா இருந்தால் மட்டுமே மனுதாரர் அரசு வக்கீலிடம் கருத்துரு பெற்றுத் தரவேண்டும். விதிமுறைகளின் படி சூரிய அடுப்பு 1500 .அடி மேலுள்ள கட்டடத்திற்கு வரைபடத்தில் காட்டப்படவேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்ற 1, 2, 3, 4, 8, 9, 10, 19, 26, 27 மற்றும் 31 மற்றும் 32 பாகம் ஆகிய இடங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்பவர்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தரவேண்டும். அதற்குரிய வைப்புத் தொகையையும் செலுத்தவேண்டும்.

கட்டட வரைபடங்களுக்கு அனுமதி வழங்குவதில் தாமதத்தை தவிர்ப்பதற்கு ஏற்கனவே கிரீன் சேனல் முறைப்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை காலை மேயர், மாநகராட்சி அலுவலக்தில் வரைபட அனுமதிக்கான மனுக்களை பெறுகிறார். அன்றே உரிய அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு ஆவணங்களை சரிபார்த்து மறுநாள் செவ்வாய் கிழமை காலை பொதுமக்களிடம் மனு பெறவரும் போது ஏற்கனவே கொடுத்த மனுக்களுக்கான கட்டட வரைபட அனுமதியை வழங்குகிறார். இந்த முறையில் 24 மணி நேரத்திற்குள் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 401 கட்டட அனுமதி விண்ணப்பம் பெறப்பட்டு கட்டட அனுமதி பெறப்பட்டு உடனடியாக 397 கட்டட விரும்புவோர்கள் திங்கள் கிழமை தோறும் மேயரிடம் நேரில் கட்டட வரைபடத்திற்கான மனு ஆவணங்களை தந்து 24 மணி நேரத்திற்குள் அனுமதியை பெற்றுக் கொள்ளவேண்டும்.கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு வரிவிதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் அடிக்கடி எழுப்பப்பட்டது. எனவே சென்ற மாதம் முதல் புதியதாக கட்டடம் கட்டியதும் கட்டட உரிமையாளர்கள் உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மைய அலுவலகத்தில் சமர்பித்து உடனடி வரிவிதிப்பு உத்தரவு பெறலாம். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிபார்த்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்குரிய அதிக பணத்தை வரியாக விதிப்பர். எனவே மாநகரத்தில் உள்ள மக்களுக்கு மாநகராட்சியின் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதில் மேயர் என்ற முறையில் நான் உறுதியாக இருக்கிறேன்.எனவே கட்டடம் கட்டுபவர்கள் மேற்கண்ட வழிமுறைகளை கடைபிடித்து தாமதமின்றி கட்டட வரைபடங்களுக்கான அனுமதியையும், வரிவிதிப்பையும் பெற்றிட பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.