Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சில்லரை சச்சரவுக்கு தீர்வு பஸ் பயணத்துக்கு ரீசார்ஜ் கார்டு

Print PDF

தினகரன்                     29.10.2010

சில்லரை சச்சரவுக்கு தீர்வு பஸ் பயணத்துக்கு ரீசார்ஜ் கார்டு

பெங்களூர், அக். 29:பஸ்களில் சில்லரை பிரச்னைக்கு தீர்வுகாண காமன் மொபைலிட்டி கார்டுஎனும் ரீசார்ஜ் கார்டு திட்டம் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்குமிடையேயான சில்லரை சச்சரவுகள்இனி வரவாய்ப்பில்லை.

நாட்டில் முதன்முறையாக பஸ்களில் இணையதள வசதி பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில்லரை சச்சரவுக்கு தீர்வுகாண்பதற்காக கார்டுதிட்டம் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ‘காமன் மொபைலிட்டி கார்டுஎன்பது பார்ப்பதற்கு வங்கி ஏடிஎம் கார்டு, டெபிட் கார்டுபோல இருக்கும். இந்த கார்டுகளுக்கு செல்போன்போல ரீசார்ஜ் செய்ய வேண்டியது அவசியமாகும். பஸ்சில் பயணிக்கும்போது கார் டை நடத்துனரிடம் அளித்தால் அவரிடமுள்ள ஸ்வைப் இயந்திரத்தில் கார்டை உரசி பயணி செல்ல வேண்டிய தூரத்திற்கு எவ்வளவு கட்டணமோ அதற்குரிய பணம் கழித்துக்கொள்ளப்படும்.

கார்டில் பணம் குறைந்துவிட்டால் மறுபடியும் ரீசார்ஜ் செய்து பயணி அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக பெங்களூரில் 100 மையங்கள் திறக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது இந்த கார்டு மூலமாக டிக்கெட் கட்டண த்தை அளிக்கலாம். வாகன பார்க்கிங் பகுதிகளிலும் இதே கார்டைகொண்டு பணம் செலுத்தலாம்.போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் இதுகுறித்து கூறும்போது, "மத்திய அரசு இத்திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. நாட்டிலேயே முதலில் பெங்களூர் நகர பஸ்களில் இத்திட்டத் தை அமல்படுத்துமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கார்டில் உள்ள சிப் பை மத்திய அரசு அளிக்கும் என்பதால் வருங்காலங்களில் இதே கார்டை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியிலும் பஸ் பயணத்தை மேற்கொ ள்ள முடியும். முதல்கட்டமா க ரூ.16 கோடி செலவில் பெங்களூரின் 1000 பஸ்களில் இந் த கார்டுகள் மூலம் பயணம் செய்யும் வசதி செய்துகொடுக்கப்படும்.

நகர பஸ்களில் நடத்துநர்கள் சிலர் டிக்கெட் வினியோகிக்காமலேயே பயணிகளிடமிருந்து சிறிதளவு பணத்தை பெற்றுக்கொண்டு பயணிக்க அனுமதிக்கின்றனர். இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ‘காமன் மொபைலிட்டி கார்டுதிட்டத்தால் இதுபோன்ற முறைகேடு தடுக்கப்படும்.

எலக்ட்ரானிக் முறையில் எப்.சி:வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ் (எப்.சி) அளிக்கும்போது இனிமேல் அதிகாரிகள் தலையீடு இன்றி முழுவதும் எலக்ட்ரானிக் முறையில் வாகனங்களை சோதனை நடத்தும் திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். தற்போது பெங்களூர் மல்லத்தஹள்ளியில் முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வழங்கும் மையம் திறக்கப்பட்டுள் ளது. அதிகாரிகள் தலையீடு இன்றி கம்ப்யூட்டர்கள் மூலமாகவே ஓட்டுநர்களின் திறமையை மதிப்பு செய்யும் இத்திட்டத்தை தமிழகம், குஜராத், ராஜஸ்தான் மாநில போக்குவரத்து அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.இவ்வாறு அசோக் தெரிவித்தார்.