Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கரூர் நகராட்சி சாதாரண கூட்டம்

Print PDF

தினகரன்                             29.10.2010

கரூர் நகராட்சி சாதாரண கூட்டம்

கரூர், அக்.29: கரூர் நகராட்சி சாதாரண கூட்டம் பெத்தா ட்சி மண்டபத்தில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவி சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலை வகித் தார். நகராட்சி மற்றும் மாநகராட்சி மாணவர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் மாநில அளவில் முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசுத்தொகை கூடுதலாக வழங்குதல், நகராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் கள், தாய்சேய் நல விடுதி பெண் உதவியாளர்கள், ஆயாக்கள், ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்களு க்கு சீருடைகள் வழங்குவது சம்பந்தமான செலவுகள் குறித்து மன்றத்தின் அனுமதி கேட்பது, நகராட்சி பொதுப்பிரிவு, பொறியியல் பிரிவு போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கால ணிகள் வழங்குதற்குண்டான செலவுகள் குறித்தும் மன்றத்தின் அனுமதி கோறுவது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, காங்கிரஸ் கவுன்சிலர் சுப்பன்; கரூர் பஸ் ஸ்டாண்டில் பெண்கள் நிற்கும் பகுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க நகராட்சி சார்பில் எப்போது டெண்டர் விடப்பட்டு பணிகள் நடக்கும் எனக்கேட்டார். அதற்கு பதலளித்த தலைவி சிவகாமசுந்தரி, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், திமுக உறுப்பினர் மாரப்பன்: எனது வார்டு பகுதியில், பொதுமக்களுக்கு நகராட்சியின் அனுமதியின்றி பிட்டரால் பைப் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பல கூட்டங்களில் கூறி விட்டேன் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். அது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தலைவர் கூறியதும் அனைத்து கவுன்சிலர்களும் எழுந்து சென்றனர்.