Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளாட்சி தின விழாவில் ரூ1.12 கோடியில் நல திட்ட உதவிகள் மத்திய அமைச்சர் வழங்கினார்

Print PDF

தினகரன்                02.11.2010

உள்ளாட்சி தின விழாவில் ரூ1.12 கோடியில் நல திட்ட உதவிகள் மத்திய அமைச்சர் வழங்கினார்

ஊட்டி, நவ. 2: ஊட்டியில் நடந்த உள்ளாட்சி தின விழாவில் 714 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

ஊட்டி அண்ணா கலையரங்கில் உள்ளாட்சி தின விழா மற்றும் நகராட்சி பூங்காக்கள் திறப்பு விழா நடந் தது. நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, முன்னாள் அரசு கொறடா முபாரக், எம்.எல்..க்கள் சவுந்திரபாண்டியன், கோபாலன், துணை தலைவர் ரவிக்குமார், மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் இளங்கோ, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்து பேசியதாவது:

கடந்த 4 ஆண்டாக நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின விழா கொண்டாடப்படுகிறது. மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனைத்து அனைத்து விதமான

அதிகாரங்கள் மற்றும் நிதிகள் வழங்குவதிலும் தமிழகமே முன்னோடியாக உள்ளது.

சில உள்ளாட்சி அமைப்புக்களில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்றினாலும், தொடர்ந்து அதனை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதில்லை. எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்வதிலும் உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். தங்களுடைய அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றார்.

ஊட்டியில் நகராட்சி சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சத்து 32 ஆயிரத்து 623 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:தமிழகம் சிறந்த முதல்வரை பெற்றுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 1989ம் ஆண்டில் தான் சுய உதவிக்குழு துவக்கப்ப்டடது. கலைஞர் ஆட்சியில் தான்பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்களுக்கு சுழல்நிதி மற்றும் வங்கி கடன் உதவி வழங்கி பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது கலைஞர் தனது வாக்குறுதியில் தெரிவித்ததை விட பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்துவிட்டார். குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், ரூ.1க்கு அரிசி மற்றும் இலவச கலர் டிவி போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் தகரம் மற்றும் பிளாஸ்டிக் வேய்ந்த குடிசை வீடுகள் கான்கிரிட் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஊட்டியில் மின் மயானம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தமிழகத்தின் முன்னோடி மாவட்டமாக திகழ என்றும் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு மத்திய அமைச்சர் ராசா பேசினார்.