Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தின விழா

Print PDF

தினகரன்               02.11.2010

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தின விழா

தென்காசி, நவ. 2: தென்காசி நகராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தின விழா நடந் தது. நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் தலைமை வகித்தார். ஆணையாளர் செழியன், துணைத்தலைவர் இப்ராகிம் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் ராமரா ஜன், ராசப்பா, முருகன்ராஜ், வெள்ளப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, செய்யது சுலைமான், கணபதி, இசக்கி, லட்சுமிமாரியப்பன், திமுக இளைஞரணி சாதிர், வார்டு செயலாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவ மாணவிகளுக் கான பேச்சுபோட்டி, சுயஉதவிக்குழு பெண்களுக்கான கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக 77 கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் வழங்கினார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் நேற்று உள்ளாட்சி தின பேரணி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி நடந்தது. பயணியர் விடுதி முன்பிருந்து பேரணி புறப்பட்டது. நகராட்சி தலைவி பார்வதிசங்கர் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ& மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிஎஸ்எம் திருமண மண்டபத்தை அடைந்தது. அங்கு பேச்சுபோட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் சங்கரன், பொறியாளர் வாசுதேவன், சுகாதார அதிகாரி குருசாமி, மேலாளர் ராஜாமணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், விமலாராணி, சேவியர், முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் யூனிய னில் நடந்த உள்ளாட்சி தினவிழாவிற்கு சேர்மன் அன்பு மணி கணேசன் தலைமை வகித்தார். துணை சேர்மன் சங்கரபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமா, லீலா முன்னிலை வகித்தனர். களப்பாகுளம் பஞ்.தலைவர் பேச்சிமுத்து, துணைத்தலைவர் சந்திரன், ஊராட்சி உதவியாளர் வெள்ளத்துரை, கரிவலம் பஞ்.தலைவர் பால்ராஜ் ஆகி யோர் பேசினர். போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

யூனியன் விரிவாக்க அலு வலர் ஆறுமுகநயினார், ஊராட்சி கவுன்சிலர் முரு கேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நேற்று உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் காவல் நிலையத்தில் துவங்கிய பேரணி, மெயின் ரோடு வழியாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் பேச்சுப் போட்டி நடந்தது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பி.டி.., சண்முகவல்லி தலைமை வகித்தார். கூடுதல் யூனியன் துணை சேர்மன் வீரபாண்டியன், பி.டி.., துரை டேனியல், அலுவலக மேலா ளர் முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். யூனியன் சேர்மன் எப்சி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். விழாவில் யூனியன் பணியாளர்கள் சுப்பையா, பூத்துரை, தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு:

களக்காடு பேரூராட்சி சார்பில் கோவில்பத்தில் உள்ளாட்சி தின விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார். கவுன்சிலர் அருணா முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்றார். இதில் கவுன்சிலர்கள் நெல்லையப்பன், ருக்மணி, .மு.மு.. மாவட்ட பொருளாளர் சர்தார் அலி கான், பேரூராட்சி பணியா ளர் கார்த்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின் னர் களந்தை ஜின்னா நினைவு சிறுவர் பூங்காவை பேரூராட்சி தலைவர் முத்துகிருஷ்ணன் திறந்து வைத் தார்.

தென்காசி நகராட்சி அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சி தின விழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நகர்மன்ற தலைவர் கோமதிநாயகம் பரிசு வழங்கினார்.